மலேசியாவின் அதிகாரப்பூர்வ மதம் இஸ்லாம் - நஜிப்

18/05/2011 11:00

மலேசியாவின் அதிகாரப்பூர்வ மதம் இஸ்லாம் - நஜிப்

 

இஸ்லாம் நாட்டின் அதிகாரத்துவ மதம் என்பதை அனைத்து தரப்பினர் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதனை எத்தகைய சூழலிலும் மாற்ற முடியாது என்ற உண்மையை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.


இதற்கு காரணம் நமக்கென்று அரசியலமைப்பு சட்டம் உள்ளது. அதில் இஸ்லாம் மற்றும் இதர மதத்தின் நிலையை அது தெளிவாக விவரித்து உள்ளது என நஜிப் சொன்னார். நாட்டிலுள்ள 22 தலைவர்கள் மற்றும் இஸ்லாமிய பண்டிதர்கள் ஆகியோருடனான சந்திப்பிற்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். இந்த சந்திப்பின் போது பலதரப்பட்ட விஷயங்கள் விவாதிக்கபப்ட்டதாகவும் அதில் வேறு மதங்களை அதிகாரப்பூர்வ மதமாக்குவது தொடர்பிலான விவாதங்களும் இடம்பெற்றதாகவும் அவர் சொன்னார்.


தாம் அவ்வப்போது இஸ்லாமிய தலைவர்களைச் சந்தித்து வருவதாகவும் ஆனால் தற்போது நிலவிவரும் நிலைமையைத் தொடர்ந்து அவர்களை தற்போது சந்திப்பது அவசியமாகிறது. மேலும் அவர்களுடன் இந்த விவகாரம் பற்றியும் மேலும் இதர விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த சந்திப்பின்போது நாட்டின் அமைதி, சுபிட்சம்,வளப்பம் பராமரிக்கப்படுவது அவசியம் என்ற கருத்தை அவர்கள் முன்வைத்ததாக அவர் சொன்னார்.

 

வணக்கம் மலேசியா இணையதளம் வாயிலாக....