மலேசியாவில் நிலச்சரிவு: 15 சிறுவர்கள் பலி

22/05/2011 16:59

மலேசியாவில் உள்ள மத்திய செலங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் திடீர் என்று 2 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கு இருந்த அனாதை இல்லம் மண்ணுக்குள் புதைந்தது.
 

 

தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் விரைந்து சென்று மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இருந்தும் அனாதை இல்லத்தில் தங்கி இருந்த 15 மாணவர்கள் மற்றும் இல்ல நிர்வாகி ஒருவர் ஆகியோர் உயிரிழந்தனர்.


இவர்கள் தவிர 9 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஏற்கனவே பெய்த மழை காரணமாக பூமிக்குள் இருந்த ஈரத்தினால் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

nakkheeran.in