மழைச் சேதங்களை தெரிவிக்க தொலைபேசி எண் 1077 - ஹரிஹரன் தகவல்

05/10/2010 16:46

ராமநாதபுரம் மாவட்டத்தில் மழைச் சேதங்களை 1077 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை ஆரம்பமாகிவிட்டபடியால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்கமிங் வசதி மட்டும் உடைய 1077 என்கிற எண் கொண்ட தொலைபேசி வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணை அவசரக் காலங்களில் பொதுமக்கள் பயன்படுத்தி, மழையினால் ஏற்படும் இன்னல்களை உடனுக்குடன் தெரிவிக்குமாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தினமணி