மவ்லீதும் - தர்ஹாவும் தொடரும் அவலங்கள்

11/01/2012 22:36

ஸபர் மாதம் வந்துவிட்டால் நமதூர் தர்ஹாவில் மவ்லீது பாடல் துவங்கி 10 நாட்கள் நடக்கும். இந்த இணைவைப்புக் காரியத்தை எதிர்த்துதான் முதன் முதலில் தவ்ஹீத் ஜமாஅத்தினர் இமாம் ஜமாஅத்தை புறக்கணிக்கத் துவங்கினர். அடுத்த வருடம் தனி மர்கஸ் கண்டனர். ஆனால் அந்த அவலம் தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் வருகிறது. அதை எதிர்த்து பல்வேறு முறையில் மக்களிடையே பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்தவகையில் கடந்த 8 ஆம் தேதி தவ்ஹீத் மர்கஸில் வைத்து தர்ஹா மட்டும் மவ்லீதுக்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டது அதில் கிளைத் தலைவர் சகோதரர் ஜாஹிர் அலி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.