மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் பல்வேறு பணிகளுக்கு பரிந்துரை

10/08/2010 16:27

 

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் உதவி நிரலர், இளநிலை உதவியாளர் மற்றும் உதவிக் கிடங்கு மேலாளர், இருட்டறை உதவியாளர் பணியிடங்களுக்கு பரிந்துரைக்கப்பட உள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரம் கலெக்டர் ஹரிகரன் அறிக்கையில்:

சென்னை நகராட்சி நிர்வாக இயக்குநரால் அறிவிக்கப்பட்டுள்ள உதவி நிரலர் பணி, தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன நிர்வாக இயக்குநரால் அறிவிக்கப்பட்டுள்ள இளநிலை உதவியாளர் மற்றும் உதவி கிடங்கு மேலாளர் பணி, தமிழ்நாடு மருத்துவக்கழக நிர்வாக இயக்குநரால் அறிவிக்கப்பட்டுள்ள, இருட்டறை உதவியாளர் பணி ஆகிய காலியிடங்களுக்கு, ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை செய்யப்பட உள்ளனனர்.<br>உதவி நிரலர் பணியிடத்திற்கு: பி.எஸ்.சி., பட்டப்படிப்புடன் புள்ளியியல் அல்லது பி.ஏ., பொருளாதாரம் அல்லது பி.காம் வணிகவியல் பாடத்துடன் பி.ஜி.டி.சி.ஏ., பட்டயச் சான்று கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

ஆதிதிராவிடர் மலை சாதியினர், ஆதிதிராவிடர் அருந்ததியினர், ஆதிதிராவிடர் ஆகியோர் 40 வயதும், மிகவும் பிற்பட்டோர், பிற்பட்டோர், பிற்பட்ட முஸ்லிம், ஆகியோர் 35 வயதும், பொதுப்பிரிவினர் 30 வயதும் 1.7.2010 அன்று முடிந்திருக்கக் கூடாது.

இளநிலை உதவியாளர் மற்றும் உதவிக் கிடங்கு மேலாளர் பணிக்கு: ஆதிதிராவிடர் மலை சாதியினர்(பொது) முன்னுரிமை அற்றவர்கள், ஆதிதிராவிடர் அருந்ததியினர், ஆதிதிராவிடர் பொது மற்றும் பெண்கள், முன்னுரிமையற்ற தாழ்த்தப்பட்ட பிற வகுப்பினர் (பொது) மட்டுமே தகுதியுடையவர்கள். வயது 1.7.2009 அன்று 40 வயது முடிந்திருக்கக் கூடாது.

இருட்டறை உதவியாளர் பணியிடத்திற்கு: பிளஸ் 2 கல்வித் தகுதியுடன், ரேடியோலாஜிக்கல் உதவியாளர் பட்டயச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். வயது ஆதிதிராவிட மலை சாதியினர், ஆதிதிராவிடர் அருந்ததியினர், பிற பிரிவு ஆதிதிராவிடர் 40வயதும், மிகவும் பிற்பட்டோர், பிற்பட்டோர், பிற்பட்ட முஸ்லிம் வகுப்பினர் 37 வயதும், பொதுப்பிரிவினர் 35 வயதும் 1.6.2010 அன்று முடிந்திருக்கக் கூடாது.

மேற்கண்ட தகுதியுடையவர்கள் மட்டும் தற்போதைய தேதிவரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தால், தங்களது வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை மற்றும் அனைத்துக் கல்விச் சான்றிதழ்களுடன் ஆக.9ம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.