மாவட்டத்தில் 71.95 சதவிகிதம் வாக்குப் பதிவு

14/04/2011 19:46

ராமநாதபுரம் மாவட்டத்தில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இல்லாமல் வாக்குப் பதிவு நடந்து முடிந்திருப்பதாகவும் மாவட்ட அளவில் 71.95 சதவிகித வாக்காளர்கள் வாக்களித்து இருப்பதாகவும் ஆட்சியர் த.ந. ஹரிஹரன் புதன்கிழமை தெரிவித்தார்.

 

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

 

  • ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி தொகுதியில் 70,905 ஆண்கள், 77,695 பெண்கள், 49 ஓ. பிரிவில் வாக்களித்தவர்கள் 3 பேர் உட்பட மொத்தம் 1,48,600 பேர் வாக்களித்துள்ளனர்.
  • திருவாடானையில் ஆண்கள் 74,600, பெண்கள் 87,843, மொத்தம் 1,62,443 பேரும்,
  • ராமநாதபுரத்தில் ஆண்கள் 73,555, பெண்கள் 86,522, மொத்தம் 1,60,077 பேரும், 49 ஓ பிரிவில் இருவரும்வாக்களித்துள்ளனர்.
  • முதுகுளத்தூரில் ஆண்கள் 84,724, பெண்கள் 95,403, மொத்தம் 1,80,127 பேர் வாக்களித்துள்ளனர்.

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தமாக ஆண்கள் 3,03,784, பெண்கள் 3,47,463 பேர் உட்பட மொத்தம் 6,51,247 பேர் வாக்களித்துள்ளனர். மொத்தமாக 49 ஓ பிரிவில் பரமக்குடியில் 3 பேரும், ராமநாதபுரத்தில் இருவருமாகச் சேர்த்து மொத்தம் 5 பேர் மட்டும் வாக்களித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்த சதவிகிதம் 71.95.

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் சதவிகித அளவில் பரமக்குடியில் 72.45, திருவாடானை 74.5, ராமநாதபுரம் 70.8, முதுகுளத்தூரில் 70.17 சதவிகிதமும் மொத்தத்தில் 71.95 சதவிகித அளவில் வாக்குப் பதிவு நடந்துள்ளது. எவ்வித அசம்பாவித சம்பவமும் இல்லாமல் வாக்குப் பதிவு நடந்திருப்பதாகவும் ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்தார்.

 

தினமணி