மின்சாரம் தாக்கி இருவர் பலி

10/09/2012 20:03

 திருவாடானை:திருவாடானை சின்னகீரமங்கலம் நூற்பாலையில், உரத்தூரை சேர்ந்த தனசேகரன், 31, ஆக.30ல் மின்சார அறையில் வேலைபார்த்தபோது மின்சாரம் தாக்கியது. மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று இறந்தார். இவரது சகோதாரர் கண்ணன் புகாரின்படி, திருவாடானை போலீசார், நூற்பாலை உரிமையாளர் வினோத்பட்டி, மேற்பார்வையாளர் ராமசாமி, உதவி பொறியாளர் பெரியய்யா ஆகியோர் மீது வழக்குபதிந்து தேடி வருகின்றனர்.

உச்சிப்புளி: உச்சிப்புளி அருகில் உள்ள குப்பானிவலசையை சேர்ந்தவர் ராமலிங்கம், 22. இவர் ஸ்பௌன்டர் ப்ளஸ் பைக்கில்(ஹெல்மேட் அணியவில்லை) நேற்று மதியம் 3 மணிக்கு, மரவெட்டி வலசைப்பகுதியில் செல்லும்போது, நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். உச்சிப்புளி @பாலீŒõர் விŒõரித்து வருகின்றனர்.

Dinamalar