மின்வாரியத்தில் வேலைவாய்ப்பு

10/09/2012 20:05

ராமநாதபுரம்:மின்சாரவாரியத்தில் களப்பணியாளர் பணியிடத்திற்கு, எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி பெற்ற என்.டி.சி., வயர்மேன், எலக்ட்ரிசியன், பயிற்சி முடித்த பதிவுதாரர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரைக்கப்பட உள்ளனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், வயது 18 முதல் 35க்குள், பிற்பட்ட வகுப்பினர் 18 முதல் 32க்குள், பொது போட்டியாளர் 18 முதல் 30 வரை. தகுதியுடையோர், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை மற்றும்அனைத்து சான்றிதழ்களுடன் இன்று, ராமநாதபுரத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று அறிந்து கொள்ளலாம்.

Dinamalar