மீனவர்கள் மீது இலங்கை கடற்படை சரமாரி தாக்குதல்

10/09/2012 17:58

 

இராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீன்பிடிக்க விடாமல் மீண்டும் விரட்டியடித்தனர்.

இராமேசுவரத்திலிருந்த நேற்று சுமார் 600 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

இவர்கள் இலங்கை கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் துப்பாக்கியை காட்டி விரட்டினர்.

மேலும் சில படகுகளை மடக்கி பிடித்த இலங்கை கடற்படை வீரர்கள், படகில் மீனவர்களை கயிறு, கம்பால் சரமாரியாக தாக்கி, இனிமேல் இப்பகுதியில் மீன்பிடிக்க வரக்கூடாது என எச்சரிக்கை செய்து மீனவர்களை விரட்டி உள்ளனர்.

இலங்கை கடற்படை வீரர்கள் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதை தடுத்து நிறுத்தி, சுமூகமான தீர்வு காண கோரி செப்ரெம்பர் 4 ம் திகதி தமிழக மீனவர் சங்க நிர்வாகிகள் பிரதமர் மன்மோகன்சிங்கை டெல்லியில் நேரில் சந்தித்து மனுக் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

newindianews.com