முஸ்லிம் பெண்கள் உரிமை மாநாடு

29/11/2010 15:02

 

 

மானாமதுரை, நவ. 28: சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் பாரதிய முஸ்லிம் மகிளா அந்தோலன் மற்றும் வின்ட் அறக்கட்டளை சார்பில் உள்ளாட்சி அமைப்புகளில் முஸ்லிம் பெண்களின் உரிமை குறித்த மாநாடு நடைபெற்றது.

 

இம் மாநாட்டுக்கு சமூக நல வாரியத் தலைவர் சல்மா தலைமை வகித்தார்,

 

பாரதிய முஸ்லிம் மகிளா அந்தோலன் மாநில அமைப்பாளர் காமிலா முன்னிலை வகித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் சித்திக் வரவேற்றார்.  இம் மாநாட்டில் மாவட்ட கூட்டமைப்புத் தலைவர்கள் ஜீனத்நிஷா, சாராம்மாள், தாகிரா, அம்ஜத்பானு உள்ளிட்ட நிர்வாகிகள் பேசினர்.

 

முஸ்லிம் பெண்கள் அனைவரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

 

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரஜியாபேகம் நன்றி கூறினார்.     

 

 

dinamani.com