முஸ்லிம்களுக்கு களங்கம் ஏற்படுத்த ஆர்எஸ்எஸ்தான் குண்டு வைத்தது: திக்விஜய்!

15/05/2011 17:12

முஸ்லிம்களுக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் நாடு முழுவதும் குண்டுகளை வெடிக்கச் செய்தது என்று காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திக் விஜய் சிங், உத்திரப் பிரதேச மாநிலம் மெயின்பூரி என்ற இடத்தில் நடைபெற்ற பேரணி ஒன்றில் கலந்து கொண்டு திக் விஜய் சிங் பேசினார்.

முஸ்லிம்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் நாடு முழுவதும் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியது. குண்டு வெடிப்புகளைத் தொடர்ந்து பல முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் மாலேகான் குண்டு வெடிப்பில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட பின், நாட்டில் குண்டு வெடிப்புகள் நிகழ்வது நின்றுவிட்டது என்று திக் விஜய் சிங் கூறினார்.

ஆர்.எஸ்.எஸ்.ஸின் செயல்பாடுகளுக்கு எதிராக கண்டம் தெரிவித்து அறிக்கை எதனையும் முலாயம் சிங் ஒரு முறை கூட வெளியிடவில்லை என்று திக்விஜய் சிங் குற்றம் சாட்டினார்.

முலாயம் சிங், மாயாவதி மற்றும் பாஜக ஆகியோர் மக்களை ஜாதீய ரீதியாகவும் மத ரீதியாகவும் பிரிக்கின்றனர் என்றும் திக்விஜய் சிங் கூறினார்

inneram.com