முஸ்லீம்களுக்கு 12% இடஒதுக்கீடு: சந்திரசேகர ராவ் வாக்குறுதி

28/08/2010 22:06

தெலங்கானா தனி மாநிலம் அமைக்கப்பட்டால், முஸ்லீம்களுக்கு 12% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் வாக்குறுதியளித்துள்ளார்.

ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் அவர் இத்தகவலை வெளியிட்டார்.

மதச்சார்பின்மையை அடிப்படையாக கொண்ட மாநிலமாக தெலங்கானாவை நிர்மாணிப்பதே தங்கள் நோக்கம் என்றும், முஸ்லீம்களின் முன்னேற்றத்திற்கு இடஒதுக்கீடு அவசியம் என்றும் சந்திரசேகர ராவ் கூறினார்.