முஸ்லீம்கள் பற்றி தவறான கருத்துச் சொன்ன அஸ்ஸாம் முதல்வரை கண்டித்து செப் 12ல் சென்னையில் ஆர்ப்பாட்டம்

11/09/2012 15:53

 Muslims Illiterate Bear More Child அல்லாஹ்வின் திருப்பெயரால்....

அஸ்ஸாமில் கடந்த இரண்டு மாதங்களாக முஸ்லீம்களுக்கும் போடோ இன பழங்குடித் தீவிரவாதிகளுக்கும் இடையே கலவரம் நடந்து வருகிறது. அதில் பல்வேறு அரசியல் கட்சிகளும் மீடியாக்களும் முஸ்லீம்களுக்கு எதிராக கருத்து சொல்லி வந்தனர். பங்களாதேசில் இருந்து சட்ட விரோதமாக குடியேரிய முஸ்லீம்கள்தான் கலவரத்துக்கு காரணம் என்றெல்லாம் கூறினார்கள்.

ஆனால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பத்திரிக்கைக்கு பேட்டியளித்த அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகாய் முஸ்லீம்கள் கல்வியறிவற்றவர்களாக இருப்பதால் அதிகம் குழந்தை பெற்றுக் கொள்கின்றனர் அதனால் அவர்களின் மக்கள் தொகை அதிக விகிதத்தில் வளர்ச்சியடைந்துள்ளது என்ற ஒரு சர்ச்சைக்குறிய கருத்தை தெறிவித்துள்ளார். செய்தியாளர் இரு சர்ச்சையை ஏற்படுத்தாதா என கேட்டதற்குக் கூட அந்த கருத்தை நான் நம்புகிறேன் என்றும் அழுத்தமாக தெறிவித்துள்ளார்.

இந்த தவறான மற்றும் முஸ்லீம்கள் மக்கள் தொகை பெருக்கம் குறித்தும் அதனால்தான் கலவரம் ஏற்பட்டது என்பது போன்றும் கருத்துத் தெறிவித்த அஸாம் முதல்வரை கண்டித்து சென்னை சத்யமூர்த்திபவன் முன் வரும் 12ம் தேதி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது.

https://www.tntj.net/103501.html

கோகாயின் கருத்தை இந்த லிங்கில் பாருங்கள் https://tamil.oneindia.in/news/2012/09/09/india-muslims-illiterate-bear-more-child-161136.html