மெக்கா ரமலான் தொழுகை: "ஜீ தமிழ்' நேரடி ஒளிபரப்பு

02/09/2010 10:18

முஸ்லிம்களின் புனித நகரமாக போற்றப்படும் மெக்காவில் நடைபெறும் ரமலான் தொழுகை "ஜீ தமிழ்' டி.வி. சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

ரமலான் மாதத்தில் உலகில் உள்ள அனைத்து மசூதிகளிலும் 30 நாள்கள் முஸ்லிம்கள் மேற்கொள்ளும் நோன்பை "ஜீ தமிழ்' சேனல் ஒளிபரப்பு செய்து வருகிறது.

செப்டம்பர் 6-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை இரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மெக்காவில் நடைபெறும் சிறப்பு தொழுகை "ஜீ தமிழ்' சேனலில் ஒளிபரப்பப்பட உள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Dinamani