மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் பெரும் வெள்ளம்- 91 பேர் பலி

13/10/2012 15:32

நியாமி: மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் பெரும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 91 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் உள்ள கடந்த சில மாதங்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த ஆகஸ்ட் மாதம் வெள்ளம் ஏற்பட்டு 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர். கடும் பொருட்சேதமும் ஏற்பட்டது.

இந்த நிலையில் தற்போது நைஜர் நாட்டின் 8 மாகாணங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 91 பேர் பலியாகி உள்ளதாக, அந்நாட்டின் அமைச்சரவை இயக்குனர் அகாலி அப்தோல்காடர் தெரிவித்தார்.

வெள்ளத்தால் நாட்டில் விவசாய நிலங்கள், பயிர்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், சாலைகள், பாலங்கள், அணைகள் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் அதிகளவிலான உணவுப் பொருட்களும், கால்நடைகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளதாக அகாலி தெரிவித்தார். நைஜர் ஆற்றுப்பள்ளத்தாக்கில் சுமார் 3,050 ஹெக்டேர் விவசாய நிலம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.

ஏற்கனவே குழந்தைகளுக்கு ஊட்டசத்து குறைபாடு பிரச்சனையில் சிக்கியுள்ள நைஜர், தற்போது வெள்ளத்தில் சிக்கிய பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது.

One india news