மோசமடைந்து விட்ட பொன்குளம் - நாடார்வலசை செம்மன் சலை

11/06/2011 12:53

பனைக்குளம் மு்தல் நடார்வலசை வரையிலான சாலை பல மாதங்களாக சேதமடைந்து காணப்பட்டது. அது சம்மந்தமாக தினத் தந்தி மற்றும் தினமலர் பத்திரிக்கைகளில் செய்தி வெளியிட்டும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் திமுக வேட்பளராக வாக்கு சேகரிக்க வந்த சு.ப. தங்கவேலன் அவர்களிடம் பனைக்குளம் உள்ளிட்ட ஜமாஅத்தினர் கடுமையாக இந்த சாலை சம்மந்தமாக கேள்வி எழுப்பப்பட்டதால் மக்கள் ஓட்டுப் போட மாட்டார்கள் என்று பயந்து உடனடியாக சாலை சரி செய்யப்படும் என்று வாக்களித்தார். பின் சாலை பேடும் பணி துவங்கப்பட்டது. முதலில் செம்மன் சாலை போடப்பட்டு பின் தார் சாலைக்கான கற்களும் இறக்கப்பட்டது. ஆனால் இன்று வரை அந்த சாலை பணி நிறைவடையாமல் இருக்கிறது.