ரத்த பரிசோதனை மூலம் “10 ஆண்டுக்கு முன்பே நீரிழிவு நோயை கண்டறிய முடியும்” விஞ்ஞானிகள் தகவல்

19/09/2010 16:36

ரத்தம், சிறுநீர் சோதனைகளின் மூலம் நீரிழிவு நோய் கண்றியப்படுகிறது. நோயின் அறிகுறி தெரிந்த பின்னர்தான் அவை அறியப்படுகிறது. தற்போது 10 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நோயின் பாதிப்பை அறிய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்காம் நகரில் பிரிட்டிஷ் அறிவியல் திருவிழா நடந்தது. இதில் கலந்து கொண்டு முன்னணி விஞ்ஞானி டாக்டர் மானுவேல் மாயர் பேசினார்.
 
அப்போது, அவர் கூறும் போது, நீரிழிவு நோய் டைப் 2 பிரிவினருக்கு நீரிழிவு நோய் இருப்பதை 10 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்க முயும். அவற்றை ரத்த பரிசோதனை மூலம் அறிய முடியும்.
 
ரத்தத்தில் உள்ள மரபணு மூலக்கூறு (ஜெனிடிக் மாலி கியூல்), மூலம் இதை கண்டு பிடிக்க முடியும். இந்த மூலக்கூறு “மைக்ரோ ஆர்.என்.ஏ.” (எம்.ஐ.ஆர்) என அழைக் கப்படுகிறது.
 
இது இதயம் மற்றும் ரத்த குழாய் நோய் சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. எனவே, இந்த நோயாளிகளுக்கு எம்.ஐ.ஆர். சோதனை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Maalaimalar