ரத்த வங்கி தொடங்கியது எப்படி ?

11/09/2012 22:42

ரத்த வங்கி தொடங்கியது எப்படி ?

 
விபத்து அல்லது வியாதியால் ரத்தம் இழந்தவருக்கு ரத்தம் ஏற்றிக்காப்பாற்றுவது  இன்று சாதாரண வழக்கமாக உள்ளது. இந்த நடைமுறை, பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது.ஆனால் அப்போதெல்லாம் ரத்தம் ஏற்றுவதால் சில சமயங்களில்  நன்மை விளைந்தது, சில சமயங்களில் தீமை ஏற்பட்டது.விஞ்ஞானிகளுக்கு அது புதிராகவே இருந்தது. அதன் பின்பே, எல்லா மனித ரத்தமும் ஒரே தன்மை உடையதல்ல என்று விஞ்ஞானிகள் உணர்ந்தனர்.
 
ரத்தம் ஏற்ற வேண்டுமென்றால் ரத்தத்தைச்  சேமிக்க வேண்டும். ஆனால் உடலிலிருந்து வெளிஏற்றப்படும்  ரத்தம் உடனே உறைந்து விடுகிறது. 1914- இல் தான் சோடியம் சிட்ரேட் என்ற ரசாயனப் பொருளை ரத்தத்தில் சேர்ப்பதன் மூலம் அதன் உறைவை தடுக்க முடியும் என்று கண்டு பிடித்தார்கள்.
 
ஆனால் நீண்ட காலத்துக்கு ரத்தத்தை சேமித்து வைப்பது எப்படி? ரத்தத்தில் மிதக்கும் செல்கள் சீக்கிரத்தில் இறந்து விடுவதை தடுப்பது எப்படி? 1932- இல் இதற்க்கு சோவியத் மருத்துவர்கள் வழிகண்டனர். குளிரூட்டும் பெட்டியில் ரத்தத்தை பாதுகாத்தல், அந்த செல்களை அழியாமல் பாதுகாக்கலாம் என்று கண்டுபிடித்தனர். அதன் பிறகு ரத்தச்   சேமிப்பு நிலையங்கள்  என்ற ரத்த வங்கிகளை அமைத்து மக்களிடம் இருந்து ரத்த தானம் பெரும் வழக்கத்தை ரஷியர்கள் தொடங்கினர். அது உலகெங்கும் பரவியது.
 
1936- ம் ஆண்டு ஸ்பெயினில் பிராங்கே கலகக்  கூட்டத்திற்கு எதிராக குடியரசுப் போராட்டம் நடந்தபோது டாக்டர்  நார்மன் பிதின், ரத்தச் சேமிப்பு முறையைப் பயன்படுத்தி போர்க்களத்தில் பல வீரர்களுக்கு மறு உயிர் கொடுத்தார். பிதின் கனடா நாட்டுக்காரர். அவர் சோவியத் யூனியனின்  ரத்தச் சேமிப்பு ஏற்ப்பாடுகளை கற்றரிந்திருந்தார். 
இறுதியாக அமெரிக்க மருத்துவர்கள் பிளாஸ்மா தயாரிப்பில் வெற்றிகண்டனர். மிதக்கும் அணுக்கள் உள்ளிட்ட முழுமயான ரத்தம் தேவைப்படாத நோயாளிகளுக்கு பிளாசம கொடுக்கலாம்.பிலாச்மாவைச்  செமித்துப்பாதுகாப்பதும், நோயாளிகளுக்கு கொடுப்பதும் எளிது. மேலும் ரத்தத்தில் பிரிவுகள் இருப்பது போல்  பிளாஸ்மாவில் இல்லை, யாருடைய பிலாச்மாவையும் எவருக்கும் கொடுக்கலாம்  என்பதே  இதன் சிறப்பு.