ரமளான் வந்துவிட்டால் வழக்கமாகிவிடும் பள்ளிவாசல் பிரச்சனை

28/08/2010 15:31

நமதூரில் உள்ள இரண்டு பள்ளிவாசளுக்கும் இரண்டு குழுக்கள் இருந்து செயல்பட்டு வருவது யாவரும் அறிந்ததே. ரமளான் வந்துவிட்டால் பள்ளிவாசல்களை அளங்கரிப்பதில் போட்டி, ஓதும் மக்களை காரணம் காட்டி சமையல் ஏற்பாடுகளில் போட்டி, பள்ளிவாசல்களுக்கு நிதி வசூலிப்பதிலும் வழங்குவதிலும் போட்டி என சொல்லிக் கொண்டே போகலாம். இந்நிகழ்வுகளெல்லாம் நடுநிலையாளர்களுக்கு முகம் சுழிப்பை ஏற்படுத்தினாலும் ரமளான் முடிந்தவுடன் ஓய்ந்து விடுவது வாடிக்கை.

அதன் வழக்கமான இவ்வருட நிகழ்வுகளும் வருத்தம் அளிக்கும் வகையில் இருந்து வருகிறது. இரவு நேரங்களில் பள்ளிவாசல்களில் பல்வேறு வகையான சமையல் நடைபெருவதும், ரமளானில் இரவு நேர சமையலில் மட்டும் பங்கு கொள்ளும் நமதூர் பெரிய (?) மனிதர்களின் நடவடிக்கைகளும், அதற்க்காக போட்டி போட்டுக் கொண்டு செலவு செய்பவர்களும், போட்டிக்கான நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் நடவடிக்கைகளும் தொடர்வது மக்களிடையே நிலவும் அறியாமையையே காட்டுகிறது.

இரண்டு பள்ளிவாசல்களையும் இரண்டு கண்களாக பார்க்க வேண்டிய நம் சமுதாயத்தினா் அதில் வணக்கவழிபாடுகளை மேற்கொள்வதன் மூலம் பெருமைப்படுத்துவதை விட்டுவிட்டு இது போன்று பள்ளிவாசல்களைக் கொண்டு எங்கள் பள்ளி உங்கள் பள்ளி என்று பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் களப்பணியாற்றுபவர்களில் பெரும்பாளானோர் ஐங்காளத் தெழுகையைக் கூட நிறைவேற்றாதவர்களாக இருப்பது மிகுந்த வேதனைக்குறிய விசயமாகும்.