ரமளான் 27ஆம் நாள் புதுவலசையில்…..

28/08/2011 22:15

ரமளான் 27ஆம் நாள் புதுவலசையில்…..

 

லைலத்துல் கத்ர் இரவு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் ரமளானின் கடைசி 10ன் ஒற்றைப்படை இரவுகள் நமக்கு காட்டித்தரப்பட்டுள்ளது இந்த செய்தி ஆதாரப்பூர்வமாக புஹாரி 2017 ல் இடம்பெரும் செய்தி. ஆனால் பெரும்பாலான சுன்னத்வல் ஜமாஅத் (?) என்ற பெயரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சுன்னத்துக்களையும் வழிமுறைகளையும் புறக்கணிப்பதையே கொள்கையாக கொண்டுள்ள பெரும்பாலான பள்ளிகளில் ரமளானின் 27ம் இரவுக்கு மட்டும் முக்கியத்துவம் தந்து அதை ஒரு திருவிழாவைப் போல் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தராத தராவீஹ் மற்றும் தஸ்பீஹ் தொழுகை, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்து சுமார் 1400 ஆண்டுகளுக்குப் பின் உருவாக்கப்பட்ட மௌலீது பாடல்களை பாடுவது என மக்களை வழிகேட்டில் கொண்டு செல்லும் நடவடிக்கைகளை செய்துவருகின்றனர். பெரும்பாலான முஸ்லீம்கள் இஸ்லாத்தை அறியாதவர்களாகவும் பேஸ் இமாம்களை கண்னை மூடிக்கொண்டு நம்பக் கூடியவர்களாகவும் இருக்கின்றனர். இவையெல்லாம் எல்லோருடைய நன்மைகளையும் பாழாக்கிவிடுவது மட்டுமல்லாமல் நிரந்தர நரகத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் படுபாதக செயல் என்பதை தொடர்ந்து நாம் ஆதாரத்தோடு சொல்லிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறோம்.

 

அதே போல் அந்த இரவில் பள்ளிவாயில்களை மின் விழக்குகளால் அழங்கரித்தல் மற்றும் சாப்பாடு போடுதல் என அந்த இரவே களைகட்டும் வகையில் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆனால் அல்லாஹ்வடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

 

லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகின்றவரின் முன்னர் செய்த பாவங்கள் மண்ணிக்கப்படும். அபூஹுரைரா (ரலி) புஹாரி 2014.

 

உண்மையில் லைலத்துல் கத்ரின் முக்கியத்துவம் தெறியாததால் இதுபோன்ற காரியங்களை இவர்கள் செய்துவருகினற்னர். திருமறைக்குர்ஆன் அருளப்பட்ட காரணத்தினால் தான் லைலத்துல் கத்ர் (மகத்துவமிக்க இரவு) என்ற அந்த இரவும், அந்த இரவு இருப்பதால்தான் ரமளான் என்ற மாதத்திற்கே சிறப்பு என்பதையும் திருமறை மற்றும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் இருந்து நாம் அறிந்துகொள்கிறோம்.

ஆனால் நேற்று நமதூரில் நடந்துள்ள லைலத்துல் கத்ர் இரவு எனும் விழாவின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பாருங்கள்.

எந்த வீட்டில் உருவப்படங்கள் உள்ளனவோ அந்த வீட்டில் மலக்குகள் நுழைய மாட்டார்கள் என்பது நபிமொழி.
அபூதல்ஹா(ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரி (3227),முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது
 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து திரும்பி வந்த போது உருவங்கள் உள்ள திரைச் சீலையைத் தொங்க விட்டிருந்தேன். அதைக் கண்டதும் அவர்களின் முகம் மாற்றமடைந்தது. அதைக் கிழித்து எறிந்து விட்டு "ஆயிஷாவே! அல்லாஹ்வின் படைப்பைப் போல் படைக்க முற்படுபவர்களே கியாமத் நாளில் கடுமையான தண்டனைக்குரியவர்கள்'' என்று கூறினார்கள்.
ஆயிஷா(ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரி, (6109) முஸ்லிம், முஅத்தா, நஸயீ ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ளது
 
"சென்ற இரவு உங்கள் வீட்டுக்கு நான் வருவதற்குத் தடையாக இருந்தவை என்னவென்றால், உங்கள் வீட்டில் ஒரு மனிதனது உருவச் சிலையும், உருவம் பொறித்த திரைச்சீலை ஒன்றும், நாய் ஒன்றும் இருந்தது தான். உருவச் சிலையின் தலையை அகற்றுமாறும், உருவப்படங்கள் உள்ள திரைச்சீலையைக் கிழித்து மதிப்பில்லாமல் மிதிபடும் இரண்டு தலையணைகளாக்கிக் கொள்ளுமாறும், நாயை வெளியேற்றுமாறும் உங்கள் (குடும்பத்துக்கு) கட்டளையிடுங்கள்''என்று ஜிப்ரீல் (அலை) என்னிடம் கூறினார்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் அஹ்மத்,அபூதாவூத் (3627), திர்மிதீ ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ளது

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுளையவே தடையாக இருந்தது அந்த திரைச் சீலை (சிலாத்தி). ஆனால் அல்லாஹ்வுடைய பள்ளிவாயிலையே உருவப்படம் பொரித்த வளக்குகளால் அழங்கரித்துள்ளனர். அந்தப் பள்ளிக்குள் வானவர்கள் வருவார்களா?

இந்த படுபாதக செயலைக்கூட தடுக்க மனமில்லாமல் இருந்ததில் இருந்தே நம் இமாம்களின் நிலையையும் அவர்களின் மார்க்க அறிவையும் அவர்களின் இறையச்சத்தையும் பற்றி மக்கள் இன்றாவது சிந்திப்பார்களா?