ராகிங் பற்றி தகவல் தர புதிய சேவை எண் - இராமநாதபுரம் எஸ்.பி தகவல்

19/07/2011 17:42

 

ராக்கிங் கொடுமைக்கு எதிராக "ஹெல்ப்லைன்' எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பொறியியல், கலைக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் ""ராக்கிங்'' என்ற பெயரில் கேலி செய்யப்படுகின்றனர். இதனால் மாணவ, மாணவியர் தற்கொலைகள், கல்லூரி விட்டு வேறு கல்லூரிக்கு செல்லுதல், படிக்க இயலாமை போன்றவை ஏற்படுகிறது. இதையடுத்து அனைத்து போலீஸ் ஸ்டேஷன், ஹெல்ப்லைன் நம்பர் பற்றி மாணவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

 

ராமநாதபுரம் எஸ்.பி., அனில்குமார் கிரி எஸ்.பி., கூறியதாவது: அரசு உத்தரவுப்படி மாவட்ட போலீஸ் ஸ்டேஷனில் "ராக்கிங்'' கொடுமைக்கு எதிரான ஹெல்ப் லைன் அமைக்கப்பட்டுள்ளது. ராக்கிங் பற்றி 04567 232 110, 04567 232 111ல் தகவல் தெரிவிக்கலாம், என்றார்.

dinamalar.com