ராஜபக்சே போர்க்குற்றவாளி: விக்கி லீக்ஸ் வெளியிட்ட ரகசிய அறிக்கை

02/12/2010 20:16

ராஜபக்சே போர்க்குற்றவாளி என்று கொழும்பிலுள்ள அமெரிக்க தூதர் அமெரிக்காவுக்கு ஜனவரியில் அனுப்பிய ரகசிய அறிக்கை வெளியானது.

 

 


தற்போது உலகத்தையே பரபரப்பாக்கிக்கொண்டிருக்கும்  விக்கி லீக்ஸ், இந்த அறிக்கையை அம்பலமாக்கியுள்ளது.


அந்த அறிக்கையில் ராஜபக்சே போர்க்குற்றவாளி என்றும் அவரது சகோரர்களும், பொன்சேகாவும் போர்க்குற்றத்திற்கு பொறுப்பு ஆவார்கள் என்றும் குறிப்பிடப்பிட்டுள்ளார் அமெரிக்க தூதர்.


அமெரிக்க ராணுவ ரகசியங்களை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் நிறுவனர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜுலியன் அசாங்கே ஆவார்.

இந்த பரபரப்பு அடங்கி வரும் நிலையில் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளை பற்றிய ரகசியங்களையும், அந்த நாட்டு தலைவர்களை பற்றிய ரகசியங்களையும் அமெரிக்க தூதரகங்கள் திரட்டி அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தன. இந்த ரகசியங்களையும் விக்கிலீக்ஸ் வெளியிட்டு உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
 

 

இதனால் கோபம் அடைந்த அமெரிக்க அரசாங்கம் இந்த இணையதள நிறுவனர் மீது கிரிமினல் சட்டத்தின்படியும், உளவு தடுப்பு சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானித்துள்ளது.
 
இந்த நிலையில் தலைமறைவாக இருக்கும் அவரை கைது செய்வதற்கு சர்வதேச போலீஸ் உதவியை சுவீடன்  நாடி உள்ளது.
 

 


அவரை கைது செய்வதற்காக சர்வதேச போலீசார் வாரண்டு பிறப்பித்தனர்.சர்வதேச போலீஸ் உலக நாடுகளை எச்சரித்து உள்ளது.


விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் அசாங்கேக்கு தென் அமெரிக்காவில் உள்ள ஈகுவேடார் நாடு அழைப்பு விடுத்து உள்ளது.


அவர் தென் அமெரிக்க நாடுகள் பற்றிய ரகசியங்களை எங்களுக்கு தெரிவிக்க வேண்டும். எங்கள் நாட்டின் கம்ப்யூட்டர் பொறியாளர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று அந்த நாட்டு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. அவர் எங்கள் நாட்டில் இருந்தபடி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளலாம் என்றும் அழைப்பு விடுத்துள்ளது.


இந்நிலையில் ராஜபக்சே போர்க்குற்றவாளி என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதர் அனுப்பிய ரகசிய அறிக்கையை வெளியிட்டுள்ளது விக்கிலீக்ஸ். nakkheeran.in