ராஜஸ்தானில் பெண் போலீஸ் கற்பழித்து கொலை: 2 போலீஸ்காரர்கள் கைது

03/10/2010 17:05

ராஜஸ்தான் மாநிலம் கோடா  போலீஸ் நிலையத்தில் வேலை பார்த்த பெண் போலீஸ் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் ஒரு அறையில் பிணமாக கிடந்தார். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

அவரை கொலை செய்தது யார் என தீவிரமாக விசாரிக்கப்பட்டது. அப்போது, அவரை 2 போலீஸ்காரர்கள் கற்பழித்து கொன்றது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இச்சம்பவத்தின் போது அவர்கள் குடிபோதையில் இருந்தனர். விருப்பத்துக்கு இணங்காததாலும் உயர் அதிகாரிகளிடம் புகார் செய்வதாக மிரட்டியதாலும் அவரை கொலை செய்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து கூடுதல் டி.ஜி.பி. தலைமையில் நீதி விசாரணை நடத்த ராஜஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் கொலை செய்யப்பட்ட பெண் போலீஸ் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Inneram