ராமநாதபுரத்தில் நாளை சர்வதேச மின்னியல்,​​ கணினி தொழில்நுட்ப மாநாடு

06/10/2010 16:26

ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியும்,​​ கன்னியாகுமரி செயின்ட் சேவியர் பொறியியல் கல்லூரியும் இணைந்து,​​ தமிழகத்தில் தென்மாவட்ட அளவில் முதல் முறையாக சர்வதேச அளவிலான மின்னியல்,​​ தொலைத்தொடர்பியல்,​​ கணினித் தொழில்நுட்பம் குறித்த மாநாட்டை நடத்துகின்றன.

ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் வியாழன்,​​ வெள்ளி ஆகிய இரு நாள்கள் நடைபெறும் இம் மாநாட்டில்,​​ 4 நாடுகள் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 175 ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இது குறித்து செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி செயலாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா கூறியதாவது:

இந்த மாநாட்டை மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிப் பிரிவு

பேராசிரியர் செல்வக்குமார் மாணிக்கம் துவக்கி வைக்கிறார்.

ஓமன் அல் மவுசானா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆயம் ஏ.யகாயா,​​ மலேசிய அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஆன்ட்ரூ மெலன்பெர்க் ஆகியோரும்,​​ பேராசிரியர்கள் ராமலதா மாரிமுத்து,​​ சிவானந்தம்,​​ சுகநேஷ்,​​ இளங்கோ உள்பட முன்னணி பொறியியல் கல்லூரிப் பேராசிரியர்களும் பங்கேற்கின்றனர்.

இதில் பட்ட மேல்படிப்பு மாணவர்கள்,​​ ஆராய்ச்சியாளர்கள்,​​ பேராசிரியர்கள் பலரும் கலந்து கொள்வார்கள் என்றார் அவர்.

தினமணி