ராமநாதபுரத்தில் போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல்: அண்ணன்- தம்பி கைது

27/04/2011 10:56

ராமநாதபுரம் சாலைத் தெரு சந்திப்பில் நேற்று மாலை பிரபாகரன் என்ற போக்குவரத்து போலீஸ் காரர் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு ஜீப் நடுரோட்டில் நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 
இதையடுத்து போலீஸ் காரர் பிரபாகரன் விரைந்து சென்று அந்த ஜீப்பை ஓரமாக நிறுத்துங்கள் என்று கூறினார். அப்போது ஜீப்பில் இருந்த தேவிபட்டிணத்தை சேர்ந்த சகுபர் அலி (வயது34), முகமது ராசன் (40). இருவரும் பிரபாகரனுடன் வாக்குவாதம் செய்தனர்.
 
வாக்குவாதம் முற்றவே இருவரும் சேர்ந்து போலீஸ் காரர் பிரபாகரனிடம் ஜீப்பை ஏற்றி கொலை செய்து விடுவோம் என்று கூறினர். இது குறித்து பிரபாகரன் பஜார் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சகுபர் அலி, முகமது ராசன் ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதான 2 பேரும் அண்ணன், தம்பி ஆவார்கள்.

maalai malar