ராமநாதபுரம் பஞ்சாயத்து யூனியன் ஆணையாளருக்கு கொலை மிரட்டல் வாலிபரை போலீஸ் தேடுகிறது

09/10/2010 15:48

ராமநாதபுரம் பஞ்சாயத்து யூனியன் ஆணையாளராக அப்துல் ஜபார் (வயது45) என்பவர் பணியாற்றி வருகிறார். தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக அரசு சார்பில் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வரு கின்றன. கிராமங்களிலும் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன.
இதன் ஒரு பகுதியாக புல்லங்குடி கிராமத்தில் இந்திரா நினைவு குடியிருப்பு வீடுகள் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இதனை நேற்று யூனியன் ஆணை யாளர் அப்துல் ஜபார் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த சரவணன் (27) என்பவர் ஆணையாளரிடம் வந்து வாக்குவாதம் செய்தார்.
 
புல்லங்குடி கிராமத்தில் பல ஆண்டுகளாக வசித்து வரும் தனக்கு இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத் தின் கீழ் ஏன் வீடு ஒதுக்க வில்லை? என கேட்டார். அதற்கு அதிகாரிகள் உரிய விளக்கம் அளித்தனர். ஆனாலும் அதனை ஏற்று கொள்ள மறுத்த சரவணன் யூனியன் ஆணையாளர் அப்துல் ஜபார் மற்றும் அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததோடு கொலை செய்து விடு வதாகவும் மிரட்டல் விடுத் துள்ளார்.
 
இதுபற்றி யூனியன் ஆணையாளர் அப்துல் ஜபார் தேவிபட்டிணம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலை மறைவான சரவணனை தேடி வருகிறார்கள். இச் சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Maalaikalar