ராமநாதபுரம் மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய இலவச தொழிற்பயிற்சி கலெக்டர் ஹரிகரன் தகவல் (to apply - 5-9-10 Last Date)

29/08/2010 10:15

 

ராமநாதபுரம் மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய இலவச தொழிற் பயிற்சி அளிக்கப்பட உள் ளதாக கலெக்டர் ஹரி கரன் தெரிவித்தார்.

தொழிற்பயிற்சி

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஹரிகரன் ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மாநில அரசின் முயற்சி யில் வெளிநாடு மற்றும் உள் நாட்டு தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழிற் சாலைகளை தொடங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. இதனால் ஏராளமான தொழில் வாய்ப்புகள் உருவாகி உள்ளது. இது படித்த இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பாகும். இந்த நிலையில் படித்த இளைஞர்களுக்கு இலவசமாக தொழிற்பயிற்சி அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி முதற்கட்டமாக கடந்த 2006ம் ஆண்டு முதல் மகளிர் திட்டம் மூலம் இளைஞர்களுக்கு இலவச தொழிற் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல 2010-11ம் ஆண் டுக்கு 500 கிராம மற்றும் நகர்புற இளைஞர்களுக்கு ஜே.சி. பி., கம்ப்ïட்டர் பயிற்சி, கிரேன் பயிற்சி ஆகியவை வழங்கப்பட உள்ளது. இதே போல கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு அதிகளவில் தொழிலாளர்கள் தேவைப்படுவதால் வேலையில்லாத இளைஞர்களுக்கு கொத்தனார், பிளம்பர், எலக்ட்ரீசியன் போன்ற பயிற்சிகளும் அளிக்கப்பட உள்ளது.

விண்ணப்பம்

இந்த பயிற்சியில் சேர விரும்புவோர் 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் 8 வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். சுய உதவி குழுவில் உறுப்பினராக இருப்பவரும், உறுப்பினர்களின் வாரிசுகளும், குழு உறுப்பினராக இல்லாதவரும் விண்ணப்பிக் கலாம். விண்ணப்பங்கள் மகளிர் திட்ட அலுவலகத்தில் இலவசமாக கிடைக்கும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 5-ந் தேதிக்குள் மகளிர் திட்ட அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.