ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய மின் திட்டங்கள் : அமைச்சர் சுந்தரராஜ் தகவல்

20/03/2012 09:24

 

""ராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பூர், உத்திரகோசமங்கை உள்ளிட்ட இடங்களில் இயற்கை எரிவாயு மற்றும் சூரிய ஒளி கொண்டு இயங்கும் வகையில் புதிய மின்திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளன,'' என அமைச்சர் சுந்தரராஜ் கூறினார்.
பரமக்குடியில் அவர் மேலும் கூறியதாவது: இதன் மூலம் பல ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுவர். மாவட்டத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட பரமக்குடி, சுற்றுலாத்தலமான ராமேஸ்வரத்திலும் பாதாளச்சாக்கடைத் திட்டங்கள் இந்த ஆண்டில் துவக்கப்பட உள்ளது.
இந்து அறநிலைய மற்றும் சுற்றுலாத் துறை மூலம் ராமேஸ்வரம் கோயிலில் தீர்த்த கிணறுகள் டைல்ஸ் ஒட்டியும், குந்துகாலில் உள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்லும் சாலைகள் அகலப்படுத்தியும், பவளப்பாறைகளை கண்டுகளிக்க கண்ணாடி படகுகள் விடப்படும்.


உத்திரகோசமங்கை வடக்கு, தெற்கு பிரகாரங்கள் கட்ட ரூ.ஒரு கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நயினார்கோவில் குளம் தூர்வாரப்பட உள்ளன. ரூ.828 கோடியில் மதுரை-ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை திட்டம் வேலைகள் துவங்க உள்ளன, என்றார்.