ராமநாதபுரம் முதல் ராமேசுவரம் வரை பாதாள மின்சாரத் திட்டம்

22/12/2010 15:43

ராமநாதபுரம் முதல் ராமேசுவரம் வரை பாதாள மின்சார திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக ராமநாதபுரம் மேற்பார்வைப் பொறியாளர் ஆர்.வி.யதீந்திரன் தெரிவித்தார்.

 

 கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் வளாகத்தில் நடைபெற்ற மின்சார சிக்கன வார விழாவில் கலந்து கொண்ட பிறகு, நிருபர்களுக்கு பேட்டியளித்த போது அவர் கூறியது:

 

ராமேசுவரத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், இதற்கு நிரந்தரத் தீர்வு காணப்படுவதற்கு, சென்னை நகரத்தில் இருப்பது போன்று ராமநாதபுரம் முதல் ராமேசுவரம் வரை பாதாள மின்சார திட்டம் அமைப்பதற்கு ஆயத்தப் பணிகள் துவங்கிய நிலையில் திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு உயர்அதிகாரிகளிடம் அனுமதி பெற்று விரைவில் பணிகள் நடைபெற உள்ளன.  

 

ராஜீவ் காந்தி கிராம உத்யா யோஜனா கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ் மின்சாரம் இல்லாத கிராமங்களுக்கு ரூ. 13 கோடி செலவில் 111 டிரான்ஸ்பாமர்கள் அமைக்கும் பணியில் இதுவரை 90 சதவீதம் வேலைகள் முடிந்த நிலையில் இன்னும் சில நாள்களில் பணிகள் நிறைவு பெற்று 16 கே.வி.ஏ, 26 கே.வி.ஏ. என்ற அடிப்படையில் 2855 மின் இணைப்புகள் கொடுக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார். dinamani.com