ராமநாதபுரம் மாவட்டத்தில் நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு

02/10/2012 09:11

:ராமநாதபுரம் மாவட்டத்தில் நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் அதிகபட்ச வாக்காளர்கள் முதுகுளத்தூரிலும், குறைந்தபட்சம் பரமக்குடியிலும் உள்ளனர்.விடுபட்டவர்கள் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் ஆகிய பணிகள் இம்மாதம் முடிய நடக்கிறது. இதற்கான சிறப்பு முகாம்கள் அக்.,7, 14 மற்றும் 21ல் நடக்கிறது. 18 வயது பூர்த்தியடைந்தவர்கள், பெயர்களை சேர்த்துக் கொள்ளலாம். மற்ற நாட்களில், அந்தந்த தாலுகா அலுவலகங்களில், குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். 2013 ஜனவரியில் புதிய வாக்காளர் பெயர் பட்டியலில் வெளியிடப்பட உள்ளது.