ராமர் கோவில் கட்ட சட்டம் கொண்டு வராவிட்டால் போராட்டம்: பிரவின் தொகாடியா

12/12/2010 22:15

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வராவிட்டால் போராட்டம் நடைபெறும் என்று பிரவின் தொகாடியா கூறினார்.


அயோத்தியில் ராம ஜென்ம பூமி அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை இந்துக்கள் வசம் ஒப்படைக்க வேண்டும். ராமர் அவதரித்த அதே இடத்தில் கோவில் கட்ட பாராளுமன்றத்தில் அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி கோவை கிக்காணி மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் அனுமன் மகா வேள்வி இன்று நடந்தது. 

விசுவ இந்து பரிஷத் தின் அகில உலக பொதுச் செயலாளர் பிரவின் தொகாடியா வேள்வியில் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம்,  

‘’அயோத்தியில் ராமர் கோவில் இருப்பதாக 1994-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
 

 

இது குறித்து உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டது. கோவில் இருந்தால் என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள் என்று கேட்டது.

அதற்கு மத்திய அரசு கோவில் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அந்த இடம் இந்துக்களிடம் ஒப்ப டைக்கப்படும் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.


பின்னர் உச்ச நீதிமன்றம் தனியார் நிறுவனம் ஜி.பி.ஆர். தொழில் நுட்பம் மூலம் கட்டிடம் இருந்ததா என அகழ்வாராய்ச்சி செய்ய பரிந்துரை செய்தது.

 அந்த குழுவின் பரிந்துரையில் கோவில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதைத்தான் தற்போது 3 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி குழுவும் உறுதி செய்தது. எனவே அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரவேண்டும். இல்லையேல் சட்டம் கொண்டு வர நிர்ப்பந்தித்து போராட்டம் நடத்தப்படும்’’என்று தெரிவித்துள்ளார்.

nakkheeran.in