ராமேசுவரத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல்: 2 புதுவலசை இளைஞர்கள் கைது

23/10/2011 21:35

 

ராமேசுவரத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல்: 4 வாலிபர்கள் கைது
ராமேசுவரம், அக். 23- 
 
ராமேசுவரம் மண்டபத்தை சேர்ந்தவர் அரவிந்த்ராஜ். இவருக்கு சொந்தமான படகில் அதே பகுதியை சேர்ந்த நைனா முகமது (36), முகமது மகாவீர் (20), தான்வீர் (21), ராஜுகத் ஆகிய 4 பேரும் சேர்ந்து கோதண்டராமர் கடற்கரை பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.  
 
அப்போது இந்திய கடற்படை ரோந்து படையினர் அங்கு வந்தனர். அவர்கள் அரவிந்த்ராஜ் படகில் திடீர் சோதனை நடத்தினர். சோதனையின் போது படகில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 150 கிலோ எடையுள்ள கடல் அட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
 
இதையடுத்து இந்திய கடற்படையினர் படகு மற்றும் கடல் அட்டைகளை பறிமுதல் செய்து படகில் இருந்த 4 பேரையும் கைது செய்தனர்.

https://www.maalaimalar.com/2011/10/23131022/five-lakch-worth-sea-attai-sei.html

 

இந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள அரவிந்தராஜ், முகமது மஹாதீர் மற்றும் தன்வீர் ஆகியோர் நமதூரைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.