ராம்நாட் சின்னக்கடை தோழிவீட்டில் திருடிய மாணவி

29/06/2011 17:26

அருகே உள்ள சின்னக்கடை பட்டறைக்கார தெருவை சேர்ந்தவர் ஆரூண் ரசீத். இவரது மனைவி மஸ்தான் அம்மாள். இந்த தம்பதியின் மகள் ஹாஜிரா (19). இவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். தேவகோட்டையை சேர்ந்தவர் கீதா (19). இவர் ஹாஜிரா படிக்கும் கல்லூரி யில் படித்து வருகிறார். இருவரும் தோழிகள் ஆவார்கள்.

 
கல்லூரி விடுமுறையையொட்டி கீதா ஹாஜிரா வீட்டுக்கு வந்து இருந்தார். அங்கு சில நாட்கள் தங்கி இருந்தார். பின்னர் அவர் சொந்த ஊர் சென்று விட்டார். மஸ்தான் அம்மாள் வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்தார். உள்ளே இருந்த 40 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் காணாமல் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
 
விசாரணையில் மாணவி கீதா திருடி சென்று இருப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து மஸ்தான் அம்மாள் கேனிகரை போலீசில் மாணவி மீது நகை-பணம் திருடி விட்டதாக புகார் கூறியுள்ளார்.
 
இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து நகை-பணம் திருடிய மாணவி கீதாவை தேடிவருகிறார். தோழி வீட்டில் மாணவி நகை, பணம் திருடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாலைமலர்