லிபியாவில் நேட்டோ படைகள் குண்டு வீச்சு: பிரான்ஸ் ஜனாதிபதி சர்கோசி மீது வழக்கு

01/06/2011 16:45

லிபியாவில் சர்வதேச படைகளான நேட்டோ படைகள் முகாமிட்டுள்ளன. இந்த கூட்டுப்படையில் பிரான்ஸ், அமெரிக்கா, கனடா, பிரிட்டன் படைகள் உள்ளன.

 

இந்த துருப்புகளில் அதி தீவிர தாக்கதலை நடத்த பிரிட்டனும் பிரான்சும் முயற்சி எடுத்;துள்ளன. கர்னல் கடாபியை பதவியில் இருந்து தூக்கி புதிய ஜனநாயக ஆட்சியை மலர செய்யவும் நேட்டோ படைகள் தலைநகர் திரிபோலியில் கடாபி வீடு அருகே விமானங்கள் மூலமாக தாக்குதலை நடத்தி வருகின்றன. இதில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

 

பிரிட்டன் அபேச்ச என்ற அதி நவீன ஹெலிகொப்டர்களை பயன்படுத்த ராணுவத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. பிரான்ஸ் றொயல் டைகர்ஸ் என்ற சீறி பாயும் ஹெலிகொப்டர்களை தாக்குதலுக்கு பயன்படுத்துகிறது. ஆதி நவின ஆயுதங்கள் லிபியா போரில் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் போர் குற்ற நிகழ்வுகள் நடக்கின்றன என்று நேட்டோ படைகள் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சார்பில் இரு பிரான்ஸ் வழக்கறிஞர்கள் பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசி மீது வழக்கு தொடருகிறார்கள்.

 

ஜாக்குஸ் வெர்ஜஸ் மற்றும் ரொலண்ட் டுமாஸ் ஆகிய வழக்கறிஞர்கள் சர்கோசி மீது வழக்கினை தொடர இருக்கிறார்கள். இதனை லிபியா நீதித்துறை அதிகாரி இப்ராகிம் போக்சம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். வெர்ஜஸ் 2 நாள் பயணமாக லிபியா வந்தார். அவர் கூறுகையில், பிரான்ஸ் அரசு வன்முறை கிரிமினல்களாலும், கொலைகாரர்களாலும் வழி நடத்தப்படுகிறது என்றார்.

 

வெர்ஜஸ் நாஜி போர் கிரிமினல் கிளாஜ் பார்பி மற்றும கார்லோசுக்காக ஆஜரானவர் ஆவார். முன்னாள் சமூகத்துறை அமைச்சரான டூமாஸ் கூறுகையில், இறையாண்மை நாடான லிபியா மீது நேட்டோ படைகள் கொடூரத் தாக்குதலை நடத்துகிறது என்றார். லிபியா தலைவர் கடாபிக்கு ஆதரவாக தாம் ஆஜராக தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதம் 19 ஆம் திகதி லிபியாவில் ராணுவத் தாக்குலை சர்கோசி துவக்கினார். பெங்காசியில் போராட்டக்காரர்களை லிபிய ராணுவத்தினர் தாக்க முயன்ற போது சர்கோசி இந்த தாக்கதலை துவக்கினார்.

newonews.com (some contents were removed due to unwanted comments by the editor)