லிபியாவை விட்டு கடாபி வெளியேற மறுப்பு : தென் ஆப்ரிக்க அதிபர் அறிவிப்பு!

01/06/2011 16:29

லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக கடந்த 3 மாதமாக தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. பதவி விலகி நாட்டைவிட்டு அவர் வெளியேற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு ஆதரவாக நேட்டோ படைகள்
ராணுவத்துக்கு எதிராக குண்டு வீசி வருகின்றன. அதில் கடாபியின் மாளிகை, அலுவலகங்கள் மற்றும் படை தளங்கள் சேதம் அடைந்துள்ளன. இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஷீமா நேற்று லிபியா தலைநகர் த்ரிபோலி சென்று அதிபர் கடாபியை அவரது மாளிகையில் சந்தித்து பேசினார்.
 
அப்போது அவர் பதவி விலகுவது குறித்து விவாதிக்கப்பட்டதில் கடாபி பதவி விலக மறுத்து விட்டார். ஆனால் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக் கொண்டார். இதுகுறித்து போராட்டக்காரர்களிடம் தெரிவிக்கப்பட்டது.   ஆனால் கடாபி பதவி விலகி விட்டு நாட்டை விட்டு வெளியேறும் வரை போர் நிறுத்தம் செய்ய சம்மதிக்க மாட்டோம் என அவர்கள் திட்டவட்டதாக மறுத்து விட்டனர். இதனால் அதிபர் ஷீமாவின் பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது.
 

தினகரன்