லேசர் குண்டுகள் இந்தியாவில் தயாரிப்பு

21/10/2010 15:29

இந்தியா முதல் லேசர் குண்டை உருவாக்கியுள்ளது. இந்த குண்டு லேசர் உதவியுடன் டார்கெட்டை குறி வைப்பதால், வைச்ச குறி தப்பாது. டேராடூன் கருவிகள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்துடன் இணைந்து பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பு இந்த ஆயுதத்தை தயாரித்துள்ளது. இந்த குண்டுகள் டார்கெட்டை லேசர் மூலம் குறி வைக்கின்றன. பின்னர் அதன் எதிரொளிப்பை வைத்து குறியை துல்லியமாய் தகர்த்து விடுகின்றன.

இந்த குறி வைக்கும் பகுதியை பெங்களூரைச் சேர்ந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது. ஏற்கனவே ஒரிசாவின் சந்திப்பூர் ஆய்வு தளத்தில் இரு முறை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது. இது போன்ற லேசர் குண்டுகளை 1960ம் ஆண்டு அமெரிக்கா உருவாக்கியது. அதன் பிறகு ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் தயாரித்தன. இந்தியா தற்போது இந்த லேசர் உதவியுடன் இயங்கும் குண்டுகளை உருவாக்கியுள்ளது.
 

தினகரன்