லைலதுல் கதிர் இரவு

30/08/2010 13:56

Abdul Haleem - www.puduvalasai.in

ரமலான் மாதத்தின் கடைசி பத்து நாட்களை நெருங்கி விட்டோம். அல்லாஹ்வும் நபிகள் நாயாகம் (ஸல்) அவர்களும் இந்த கடைசி நாட்களைப்பற்றியும் அந்த நாட்களின் ஒற்றைப்படை நாட்களில் வரவிருக்கும் லைலதுல் கதிர் இரவை பற்றியும் கூறுவதை பார்ப்போம்.

மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. அதில் மலக்குகளும் ஆன்மாவும் (ஜிப்ரீல்) தம் இறைவனின் கட்டளைப்படி சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். அந்த சந்தியானது விடியற்காலை வரை இருக்கும். அல்குர்ஆன் 97:1-5

ஆயிரம் மாதங்களை விட சிறந்தது என்று சொன்னால் 83 .3 ஆண்டுகளாகும். ஒரு மனிதனின் முழு வாழ்க்கைக்கு தேவையான நன்மைகளை அல்லாஹ் இந்த லைலதுல் கதிர் இரவில் வைத்து இருக்கிறன் என்றல் அதன் முக்கியத்துவத்தை விளங்கிக்கொள்ள நாம் கடமை பட்டுள்ளோம்.

ஆகவே அதிகமான நன்மைகளை பன்மடங்கு வழங்கும் இந்த இரவை நாம் நன்மையான்முரையில் நன்மையான காரியங்களுடன் கழிக்கவேண்டும். குரான் ஓதுவது, திகிற் செய்வது, இரவு தொழுகையான 8 + 3 = 11 ராக்கதுக்களை நீட்டி இடைவெளி விட்டு தொழுவது. உபரியாக நீங்கள் நினைத்தால் நபிலான வணக்கங்களை செய்துகொள்ளலாம்.

லைலத்துல் கத்ரை ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படை இரவுகளில் நீங்கள் தேடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 2017, 2020

பெரும்பாலான முஸ்லிம்கள் லைலதுல் கதிர் இரவு என்பது ரமலான் 27 ஆம் நாள் என நம்பி அதில் மார்க்கம் அனுமதிக்காத வகையில் பல்வேறு தவறான ஹதீஸ்களை ஆதாரமாகக்கொண்டு அமல் செய்து வருகின்றனர். பள்ளிவாசல்களை அலங்கரிக்க காட்டும் அக்கரையில் ஒருசிலவற்றை லைலதுல் கதிரை அறிந்து கொள்வதில் காட்டி இருந்தாலே இந்த சர்ச்சைகளுக்கு என்றோ முற்றுப்புள்ளி வைத்து இருக்கலாம்.

அதேபோல் கடைசி பத்துநாட்களில் நபிகள் நாயகம் (ஸல்) இஹ்திகாப் இருப்பார்கள், அதிகம் அதிகம் தான தர்மங்கள் வழங்குவார்கள் என்றெல்லாம் ஹதீஸ்களில் காண முடிகிறது இதுபோன்ற நன்மையான காரியங்களில் அதிகம் ஈடுபட வேண்டும்.  

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழியில் கடைசி பத்து இரவின் ஒற்றைப்படையில் தேடிக்கொள்ளும் மக்களாகக அல்லா நம்மை ஆக்கி அருள்செய்வானாக .....