வங்கிக்கடன் மோசடி : எல்ஐசி மற்றும் வங்கி அதிகாரிகள் கைது

25/11/2010 10:00

(டிஎன்எஸ்) எல்.ஐ.சி. ஹவுசிங் லோன் பைனான்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ராமச்சந்திரன் சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

வங்கிக் கடன் வழங்குவதில் பலகோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து எல்ஐசி  நிதித்துறை தலைவர் கைது செய்யப்பட்டார். வங்கிக்கடன் வழங்குவதில் பெருமளவு முறைகேடுகள் நடந்துள்ளதாக வந்த புகார்களையடுத்து, நாடு முழுவதும் 5 முக்கிய நகரங்களில் உள்ள வங்கிகளில் சிபிஐ அதிரடி ரெய்டு நடத்தியது.

எல்.ஐ.சி. ஹவுசிங் லோன் பைனான்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ராமச்சந்திரன் சி.பி.ஐ. போலீசாரால் கைது செய்யப்பட்டார். சி.பி.ஐ. அதிகாரிகள் ராமச்சந்திர நாயரை சேர்த்து நிதித்துறை அதிகாரி சோப்ரா,  பேங்க் ஆப் இந்தியா மேலாளர் (தில்லி) மனீந்தர் சிங், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா நிர்வாக அதிகாரி  வேணுகோபால் (ஆடிட்டர்), குஜ்ஜால் (துணை ஜெனரல் மானேஜர் பஞ்சாப் நேஷனல் வங்கி, டெல்லி) ராஜேஷ் சர்மா (மும்பையை மையமாக வைத்து செயல்படும் நிதி நிறுவன அதிகாரி) மற்றும் இரு அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
 
இதுபற்றி சி.பி.ஐ. அதிகாரிகள் கூறுகையில் நிதி நிறுவனங்களில் எல்.ஐ.சி. மற்றும் எல்.ஐ.சி. ஹோம் பைனான்ஸ் பாங்க் ஆப் இந்தியா பஞ்சாப் நேஷனல் வங்கி சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா என நிதி சம்பந்தப்பட்ட வங்கிகளில் உயர் மட்ட மற்றும் மத்திய தர அதிகாரிகள் தங்களுக்கு வேண்டிய தனியார் நிதி நிறுவனங்களுக்கு வர்த்தக லோன் மற்றும் பிற லோன் வசதிளை முறைகேடாக வழங்கியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து உரிய விசாரணை நடந்து வருகிறது என்று அதிகாரிகள் கூறினார்கள். (டிஎன்எஸ்)

Cheenaionline.com