வட்டி இல்லா கடன் உதவி திட்டம் ஆகஸ்ட் வரையிலான கணக்கு விபரம்

21/09/2010 10:47

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளை சார்பில் கடந்த மே மதம் முதல் வட்டியில்ல கடன் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு நமதூர் நண்பர்களின் உதவியால் 50 ஆயிரம் ருபாய் கடனாக பெற்று அந்த தொகையில் நமதூர் மக்கள் பயன்பெரும் வகையில் வட்டியில்லாமல் கடன் கொடுக்கப்பட்டு வருகிறது. அதற்காக பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டும் வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.

இதுவரை ஆனா வரவு செலவு கணக்கு விபரம் இங்கே தரப்பட்டுள்ளது. இந்த வகைக்காக உங்களது சேமிப்பு தொகையை கொடுத்து உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நீங்கள் தரும் தொகைக்கு முறையான ரசீது மற்றும் உங்கள் பணத்திற்கு உத்திரவாதம் அத்துடன் நீங்கள் திருப்பி கேட்க்கும் பட்சத்தில் குறிப்பிட்ட தவணையில் திருப்பி தரும் வசதியுடன் கடன் பெறுவதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளது. நிரந்தர நன்மையை பெற இத்திட்டத்தில் உங்களையும் பங்குதாரர்களாக சேர்த்துக்கொள்ளுங்கள்.

இதுவரை அடைமானம் அல்லது ஜாமீன் பெற்றுக்கொண்டு கல்விக்கடன், வாழ்வாதார கடனாக 34000 வழங்கப்பட்டுள்ளது.

இருப்பு தொகை ஆகஸ்ட் 2010 வரை ருபாய் 16000 உள்ளது. இக்கடன் உதவிக்கு உதவிய நண்பர்களுக்கு முழு கணக்கு விபரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.