வட்டியில்லா கடன் திட்டத்திற்கு -உங்கள் சேமிப்பை தந்து உதவிடுவீர்

28/07/2010 10:15

28-07-2010

அன்பார்ந்த நண்பர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்....

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சமுதாய பணியில் வேறு யாரும் செய்யாத அளவிற்க்கு பல்வேறு சேவைளை பாகுபாடு இல்லாமல் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் செய்து வருகிறது. அதன் தொடர்சியாக புதுவலசை கிளை சார்பில் கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்ட வட்டியில்லா கடன் உதவித் திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

நம் மக்கள் வட்டி தொழில் செய்யும் மாற்றுமதத்தினரிடம் கடனை வாங்கிவிட்டும், பைனான்ஸ் கம்பெனிக்காரர்களிடம் கடனை வாங்கிவிட்டும் தினம் 100, 50 என்றும் அல்லது மாதக்கணக்கில் வட்டிக்கு மேல் வட்டியாகியும் கொடுக்க முடியாமலும் இருந்து வருகின்றனர். பெரும்பாலும் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களுக்கு இது பெரும் சவாலாக இருந்து வருகிறது. கணவர் வெளிநாடுகளில் இருப்பார், பணம் வர தாமதமாகும் தேவைக்கு 1000, 2000 யாரிடமாவது கடனை வாங்கிவிட்டு தினமும் அவன் வீட்டு வாசலில் வந்து நிற்கும் நிலையும், கொடுக்க முடியாத நிலையில் அவர்களிடம் பல்லிலிக்கும் நிலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நம் மக்களை வைத்து வட்டி வியாபாரம் செய்து தான் நம்மை சுற்றியுள்ளவர்கள் பிளைப்பு நடத்தி வருகின்றனர்.

கடந்த வாரம் பத்திரிககைகளில் கடையநல்லுரைச் சேர்ந்த முஸ்லிம் பெண் வட்டிக்கு கடன் வாங்கிவிட்டு தன் கற்ப்பை இழந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்று வெளிவராத செய்திகள் ஏராளம். இதனால் பாதிக்கப்படுவது நம் சமுதாயத்தின் நடுத்தர மற்றும் கீழ்நிலையில் இருக்கும் மக்களேயாவர். இவர்களுக்கு உதவிசெய்பவர்களும் இல்லை அல்லது ஏழை எழிய மக்களுக்கு சேரவேண்டிய ஜகாத்தை அவர்களுக்கு வழங்குபவர்களும் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கின்றனர்.

”இஸ்லாம் வட்டியை உண்ணாதீர்கள் என்றும் வட்டிவிசயத்தில் வட்டி வாங்குபவர்,வட்டி கொடுப்பவர்,வட்டிக்கு சாட்சியாக இருப்பவர் மற்றும் வட்டிக்கு கனக்கெழுதுபவர் ஆகிய நால்வரும் குற்றத்தில் சமமாகவர்கள் என்றும் சொல்கிறது” அதே நேரத்தில் ஜகாத் தொகையை வழங்கும் படியும் கட்டளையிட்டுள்ளது.

வெறுமெனே வட்டியை ஒழிக்க முடியுமா என்றால் முடியாது அதே நேரத்தில் ஜகாத்தையும் நடைமுறைப்படுத்தினால் முழுமையான வெற்றியை அடைய முடியும் இன்ஷாஅல்லாஹ்...

அதன் முதல் கட்டமாக சகோதரர் பசுலுதீன் அவர்கள் உதவியாலும் மற்றும் தவ்ஹீத் சகோதரர்கள் உதவியாலும் ரூ.50,000 முதலீட்டில் இந்த வட்டியில்லா கடன் உதவித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மிகக்குறைந்த முதலீடு என்பதால் நம்மை நாடிவரும் அனைவருக்கும் உதவி செய்யும் நிலையில்லாமல் உள்ளது. குறைந்தது 1 இலட்சம் இருந்தால் தற்போதைக்கு உள்ள நிலையை சமாளிக்க உதவியாக இருக்கும்.

இத்திட்டத்திற்கு யாரிடமும் உதவித் தொகை பெற்று நடத்தப்படவில்லை எழுத்து மூலமாக திருப்பித் தருவதாக உறுதியளிக்கப்ட்டே இந்த தெகை பெறப்பட்டு, இத்திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. வசதியுள்ள மக்கள் வங்கிகளில் சேமித்து வைத்துள்ள தொகையில் ஒரு பகுதியை இத்திட்டத்திற்கு வழங்கினால் போதுமானது. அவர்கள் திருப்பி கேட்கும் பட்சத்தில் அது குறப்பிட்ட தவனையில் திருப்பி செழுத்தப்படும். இன்ஷாஅல்லாஹ்.....

இத்திட்டத்தை செயல்படுத்த 3 பொருப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்க்கு முறையாக கொடுக்கல் வாஙகல்களை பதிவுசெய்யப்படுகிறது. ஈட்டுப் பொருள் (அடகு) பெற்றுக் கொண்டும் இரண்டு சாட்சியைக் கொண்டும் கடன் வழங்கப்படுகிறது. அடகு பொருள் இல்லாத நிலையில் இரண்டு ஜாமீன் கையொப்பம் பெற்றுக் கொண்டும் ஜாமீன் தாரியிடம் கடனுக்கு தாங்களும் பொருப்பு என்று உறுதிபெற்றும் கடன் வழங்கப்படுகிறது. 3 மாத தவனைக்குள் கடன் திருப்பி செழுத்தப்படல் வேண்டும் என்ற அளவுகோளின் அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அல்லாஹ்வுக்கு அழகிய கடன் வழங்குபவர்கள் யார்? என ஏழைகளுக்கு கடன் வழங்குபவர்களை அல்லாஹ் தனக்கு கடன் வழங்குபவர்களைப் போல் அழைக்கிறான்... உங்களுடைய மறுமைக்கான நன்மைகளைத் தேடிக்கொள்ளுங்கள்....

உங்களுடைய உதவிகளுக்கு தொடர்பு கொள்ள.....

அஹமது பசீர் - 9500782422

ஜாஹிர் அலி - 9486326575

நியாஸ் அஹமது (குவைத்) - 00965 97376038

அப்துல் ஹலீம் (யு ஏ இ) - 00971 508845461

பசுலுதீன் (சவுதி அரேபியா) - 00966 502823740