வழக்கறிஞர் அர்சத் உசேனை கொலை செய்ய முயன்றதாக புகார்

15/08/2010 09:38

 

 

ராமநாதபுரம்,ஆக.13: ராமநாதபுரம் வழக்கறிஞர் சங்கச் செயலாளர் அர்ஷத் உசேனை (பனைக்குளம்) காரை ஏற்றிக் கொலை செய்ய முயன்றதாக போலீஸில் வெள்ளிக்கிழமை புகார் செய்யப்பட்டுள்ளது.

 

 அர்ஷத் உசேனை, வழக்கறிஞர் சங்க அலுவலகம் முன்பாக, வழக்கறிஞர் அக்பர்ராஜா என்பவர் தரக்குறைவாகப் பேசி காரை ஏற்றி கொலை செய்ய முயன்றாராம்.

 

 இதுகுறித்த புகாரின்பேரில், கேணிக்கரை இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அக்பர் ராஜாவைத் தேடி வருகிறார்.  இதுகுறித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அர்ஷத் உசேன் கூறுகையில், வழக்கறிஞர் அக்பர் ராஜாவின் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தில் புகார் செய்து, அவரை தாற்காலிகமாக சங்கத்தில் இருந்து விலக்கி வைத்திருக்கிறோம்.  இந்நிலையில், அக்பர்ராஜா தன்னை தரக்குறைவாகப் பேசி காரை ஏற்றி கொலை செய்ய முயன்றதாக அர்ஷத் உசேன் தெரிவித்தார்.