விண்ணப்பித்து 3 ஆண்டுகளாகியும் திருமண உதவி தொகை கிடைக்காமல் பயனாளிகள் அலைக்கழிப்பு

12/09/2012 12:22

விண்ணப்பித்து 3 ஆண்டுகளாகியும் திருமண உதவி தொகை கிடைக்காமல் பயனாளிகள் அலைக்கழிப்பு 

 
திருவாடானை தாலுகாவில் திருமண உதவி தொகை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு 3 ஆண்டுகளாகியும் பணம் வழங்காமல் அலைக்களிக்கபடுவதாக பயனாளிகள்  புகார் தெரிவித்துள்ளனர்.
 
திருமண உதவி தொகை:
தமிழக அரசு சார்பில் ஏழை-எளிய பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பெண்களுக்கு திருமண உதவி தொகை திட்டத்தின் கீழ் ரொக்கம் மற்றும் தாலிக்கு தங்கம் ஆகியவை வழங்கப்படுகிறது.இதன்படி திருவாடனை தாலுகாவில்  கடந்த 2010 ம் ஆண்டு முதல் விதவை மக்கள் திருமண உதவி வழங்கக்கோரி உரிய ஆவணகளுடன் விண்ணப்பித்துள்ளார். அதன் அடிப்படையில் சம்மந்தப்பட்ட பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று துணை வட்டார வளர்ச்சி அலுவலரால் முறைப்படி விசாரணை மேற்கொள்ளப்பட்டு தகுந்த பயனாளிகளுக்கு உதவி தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை பயனாளிகளுக்கு உதவி தொகை வழங்கப்படாமல் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். 
 
அலைக்கழிப்பு :
இதுகுறித்து பயனாளிகள் தெரிவிப்பது என்னவென்றால் மனுக்கள் கொடுக்கப்பட்டு இரண்டு , மூன்று ஆண்டுகள் ஆகியும் உதவி தொகை கிடைக்கவில்லை.அலுவலகத்தில் கேட்டல் அதிகாரிகள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பதிலை கூறுகின்றனர் .எனவே உதவி தொகை பெறுவதற்கு அழைத்து திரியவேண்டிய நிலை இருக்கிறது.
எனவே திருவாடானை,ஆர்.எஸ்.மங்களம் ஆகிய யூனியன்களில் கடந்த 2010 ம் ஆண்டு முதல் விண்ணப்பித்து காத்திருக்கும் பொதுமக்களுக்கு திருமண உதவி தொகை கிடைக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயனாளிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.