விமானங்களில் தமிழில் அறிவிப்பு : குமரி அனந்தன் கோரிக்கை

14/12/2010 11:00

தமிழ்நாடு பனைத்தொழிலாளர் நலவாரிய தலைவர் குமரி அனந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 

’’மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சியின் வேண்டுகோளை ஏற்று, மும்பையில் இருந்து புறப்படும் ஜெட் ஏர்வேஸ் விமானங்களில் மராட்டிய மொழியில் அறிவிப்பு வெளியிடவும், மராட்டிய மொழி ஏடுகள் கொடுக்கவும் அனுமதி அளித்துள்ளார்கள்.

குலாம்நபி ஆசாத் விமான போக்குவரத்து மந்திரியாக இருந்தபோது, தமிழில் அறிவிப்புகள் வரவேண்டும் என்று அவரிடம் நான் கோரிக்கை வைத்தேன்.

 

 

அவரும் எனது வேண்டுகோளை ஏற்று ஆலோசிப்பதாக சொன்னார். லண்டன் செல்லும் லூப்தான்சா விமானங்களில் தமிழில் அறிவிப்பு செய்யப்படுவதை அவரிடம் நான் சுட்டிக்காட்டினேன்.

இப்போது மத்திய அரசுக்கும், நமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த வேண்டுகோளை நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கிறேன்’’என்று கூறியுள்ளார்.

 

nakkheeran.in