விமானம் செல்லும் நேரம், மற்றும் கட்டணம் குறித்த விவரங்களை இனி இணையதளத்தில் காணலாம்

08/12/2010 10:34

மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம், பயணிகள் விமான நிறுவனங்களின் கூட்டத்தை இன்று கூட்டி ஆலோசித்தது.
கூட்டத்தில் ஏர்இந்தியா, ஜெட் ஏர்வேஸ், கிங்பிஷர் உள்ளிட்டநிறுவனங்கள் கலந்து கொண்டன.

விமானத்தில் செல்லும் பயணிகளின் வசதிக்காக விமானம் செல்லும் வழி,இடம், இருக்கை, நேரம், கட்டண விவரங்களை விமான நிறுவனங்கள் தங்கள் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பயணிகள், அனைத்து விமான நிறுவனங்களின் இணையதளங்களில் விமானங்களின் கால அட்டவணையை வரும் புதன்கிழமை முதல் தெரிந்து கொள்ளலாம். newindianews.com