விமானி இல்லாமல் பறந்து குண்டு வீசும் விமானம்

24/08/2010 09:04

விமானி இல்லாமல் பறந்து குண்டு வீசும் விமானத்தை ஈரான் உள்நாட்டிலேயே முதல் முறையாக ஈரான் தயாரித்தது. இந்த விமானத்தை அந்த நாட்டு அதிபர் அகமதினிஜாத் தொடங்கி வைத்தார். இந்த விமானம் 13 அடி நீளம் உள்ளது. இது 4 ஏவுகணைகளை சுமந்து கொண்டு பறக்கமுடியும். இந்த விமானத்தை மரணத்தின் தூதன் என்று அழைக்கிறார்கள். 

இந்த விமானத்துக்கு அதிகாரப்பூர்வமாக `கரார்' (ஸ்ட்ரைக்கர்) என்று பெயரிட்டு உள்ளனர். இதன் நோக்கம் எதிரிகளை அவர்களது முகாமிலேயே அழிப்பது ஆகும் என்று அவர் கூறினார். தற்காப்புக்காக தான் இந்த ஆள் இல்லாத விமானம் தயாரிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், "மனித குலத்தின் எதிரி, ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம் என்ற எண்ணத்தை கைவிடும் வரை, ராணுவ தன்னிறைவு பெறுவதற்கான நடவடிக்கைகளில் ஈரான் தொடர்ந்து ஈடுபடும்'' என்றும் அவர் தெரிவித்தார்.