வீணாகிக் கொண்டிருக்கும் ரமளான் மாதம்...

26/08/2010 09:38

வீணாகிக் கொண்டிருக்கும் ரமளான் மாதம்...

அப்துல் ஹலீம், புதுவலசை.இன்

ரமாளானில் செய்யும் நல்லறங்களுக்கு நிகராக வேறு எந்த நல்லறத்துக்கும் கிடைக்காத மகத்தான பரிசுகள் இறைவனிடமிருந்து கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.

ஒவ்வொரு நன்மையும் அது போன்ற பத்து மடங்கு முதல் எழுநூறு மடங்குகளுக்கு நிகரானது. நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி வழங்குவேன். நோன்பு நரகிலிருந்து காக்கும் கேடயமாகும் என்று உங்கள் இறைவன் கூறுகின்றான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 1945

நீங்கள் ஒரு நாளில் செய்யும் நல்லறங்கள் அல்லாஹ்விடத்தில் 10 முதல் 700 நாட்கள் செய்யும் நல்லரங்களுக்கு நிகரானது.

உலகில் தள்ளுபடி விலையில் பொருட்களை வாங்குவதற்கு நாம் காட்டும் ஆர்வம் அல்லாஹ்வின் இந்த மகத்தான கருணைக்கு காட்டுவதில்லை.... பெழுது போக்கு அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவுக்கு அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு முக்கியத்துவம் தருவதில்லை...

டிவி, இன்டர்நெட், மொபைல் போன்கள் மூலம் முடிந்தவரை நோன்பிருக்கும் நேரத்தை கழிப்பதிலேயே குறியாக இருக்கும் நம் மக்கள். அல்லாஹ்வின் மகத்தான கூலியை தேடுவதில் முனைப்புக் காட்டுவது இல்லை. காரணம் அவர்கள் அல்லாஹ்வின் இந்த அறிவிப்புகளை நேரில் காணாததால் அதன் சக்தி தெறியவில்லை. உலகில் எந்தவிதமான வெகுமதிகள் நமக்கு கிடைத்தாலும் அவையாவும் அல்லாஹ்வுடைய பரிசுக்கு எள்ளவும் நிகரானது இல்லை.

ஆகவே கடந்தது கடந்ததாக இருக்கட்டும் இனி மீதமிருக்கும் நாளிளாவது நம்மால் முடிந்த நல்லகாரியங்களில் நம்மை ஈடுபடுத்திக் கெள்ள முயற்சி செய்வோம். அடுத்த ரமளானை நாம் அடைவோம் என்பதில் எந்த உத்திரவாதமும் இல்லை.

தொழுகையை சரியான முறையில் கடைபிடிப்பது, குர்ஆன் ஓதுதல், பயான் கேட்பது, இஸ்லாத்தை தெறிந்து கொள்வதில் ஆர்வத்துடன் ஈடுபடுவது, அல்லாஹ் தருவான் என்ற எண்ணத்தில் தாராளமாக தான தர்மம் செய்வது பொன்றவை இம்மாதத்தில் செய்யவேண்டிய முக்கியமான வணக்கங்களாகும்.

அல்லாஹ் நம் அனைவரையும் நன்மையின் பக்கம் அழைத்துச் செல்வானாக....