வெடி பொருள் மூட்டைகளுடன் 2 இளைஞர்கள் கைது

02/09/2010 10:14

திருவாடானை தாலுகா தொண்டியில், வெடி பொருள் மூட்டைகளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொண்டி பாவோடி மைதானத்தின் அருகே செவ்வாய்க்கிழமை இரவு இளைஞர்கள் இருவர் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்துள்ளனர். அப் பகுதி பொதுமக்கள், இளைஞர்கள் வைத்திருந்த மூட்டையைத் திறந்துகாட்டும்படி கூறியுள்ளனர். ஆனால், திடீரென அவர்களைத் தாக்கிவிட்டு மூன்று மூட்டைகளுடன் இளைஞர்கள் தப்பி ஓடினர்.

இதையடுத்து, அவர்களைப் விரட்டிப் பிடித்த பொதுமக்கள், தொண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அவர்கள் வைத்திருந்த மூட்டைகளை போலீஸôர் பிரித்து பார்த்தபோது, அதில் 150 ஜெலட்டின் குச்சிகளும், 150 டெட்டனேர்களும் இருந்துள்ளன.

இருவரும் தொண்டி அருகே புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் (22) மற்றும் காளியப்பன் (29) என்பது தெரியவந்தது. அவர்களைக் கைது செய்து போலீஸôர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.