வேலைக்கு தகுதியான பொறியியல் பட்டதாரிகள் 18 சதவீதம் மட்டுமே

20/08/2010 05:42

 

பொறியியல் பட்டதாரிகள், 18 சதவீதம் பேர் மட்டுமே வேலைக்கு தகுதியானவர்களாக உள்ளனர் என, ஐ.டி., நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கல்லூரிகளில் படித்துவிட்டு வரும், பொறியியல் பட்டதாரி மாணவர்கள் அனைவரும், ஐ.டி., நிறுவனங்களில் பணிபுரிய தகுதியானவர்களாக உள்ளனரா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. பொறியியல் மாணவர்கள் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் (எம்.சி.ஏ.,) மாணவர்கள் உள்ளிட்ட, 12 மாநிலங்களைச் சேர்ந்த 40 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில், பெரும்பாலான மாணவர்களுக்கு, பணிபுரிவதற்கு சிறப்பு பயிற்சிகள் தேவைப்படுவது தெரிந்தது. அதாவது, படிப்பை முடித்துவிட்டு, உடனடியாக பணியில் சேர்ந்து பணிபுரியக்கூடிய தகுதி அவர்களிடம் இல்லை. 17.84 சதவீதம் பேர் மட்டுமே, ஐ.டி., சர்வீஸ் நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியை பெற்றுள்ளனர். 4.22 சதவீதம் பேர் தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் தயாரிப்பு நிறுவனங்களில் பணிபுரிய தயார் நிலையில் உள்ளனர். அவுட் சோர்சிங் பணிகள் தொடர்பாக பணிபுரிய, 9.47 சதவீதம் பேர் மட்டுமே தகுதி படைத்தவர்களாக உள்ளனர். மாணவர்களிடம், ஆங்கில தகுதி, பிரச்னைகளை கையாளும் தகுதி, தகவல் அறிவு, கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்டவை குறித்த கேள்விகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

 dinamalar