ஹஜ் கடமையை நிறைவேற்ற இருக்கும் நமதூர் வாசிகள்

19/10/2011 21:23

அளவற்ற அருளாளனும் நிகரில்லா கருணையுடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...

”ஹஜ்” முஸ்லீம்களால் இறுதிக்கடமையாக பார்க்கப்படும் ஒரு அமல். இஸ்லாமிய அடிப்படையில் 5 பெரும் கடமைகளில் ஒரு கடமையாகும். ஹஜ் கடமையை நிறைவேற்ற இருப்பவர்கள் அனைவருமே அந்த அமல் பற்றி நன்று தெறிந்து கொள்ளவேண்டும். குறிப்பாக ஹஜ் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தூய்மையான எண்ணமாக இருக்க வேண்டும். ஆனால் இன்றோ அது ஒரு ஃபேஷனாகி விட்டது. தவறாக நினைக்க வேண்டாம் நாட்டு நடப்புகள் அப்படி இருக்கிறது. ஹஜ்ஜுக்கு செல்பவர்களில் பெரும் பாலானோரிடம் 5 வேலைத் தொழுகை முறையாக இருப்பதில்லை. மார்க்க அடிப்படையை பேனுவதில்லை, ஹஜ்ஜுக்கு சென்று வந்த பின்பும் அதே நிலையே தொடருவதையும் காண்கிறோம். அது மட்டுமல்லாமல் வட்டி, வரதட்சனை மற்றும் தர்ஹா, கோவில் வழிபாடு என்று, செய்த நல்லறங்கள் எல்லாவற்றையும் அழிக்க கூடிய இணைவைப்புக் காரியங்கள் நிறைந்த செயல்களில் மூழ்கி இருப்பவர்களை காணும் போது அப்படி நினைக்கத் தோன்றுகிறது. 

 

ஹஜ் பற்றி விரிவாக அறிந்து கொள்ள இந்த இணைப்பில் உள்ள நூலை பார்க்கவும்

 

ஒவ்வொரு வருடமும் நமதூரில் இருந்து ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்கள் சென்ற வண்ணம் உள்ளனர். இந்த வருடம் மொத்தம் 5 பேர் செல்ல உள்ளனர். அவர்களின் விபரம் வருமாறு...

1. சகோதரர் அப்துல் ஹமீது அவர்கள்

2. சகோதரர் அப்துல் ஹமீது அவர்களின் மனைவி சகோதரி வகுபியா அவர்கள்

3. சகோதரர் காதர் இஸ்மாயில் ஆலிம் அவர்கள்

4. துர்ரத் பேகம் அவர்கள்

5. மற்றும் சகோதரர் ஹாமீது அவர்களின் மனைவி சகோதரி சுலைஹா பீவி ஆகியோர்.

 

அவர்களின் ஹஜ் தூய்மையான எண்ணத்துடனும், நிறைவான அமளுடனும் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஹஜ்ஜாக அமைய எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக.