ஹஜ் பயணக் குழு: துணை முதல்வர் நேரில் வாழ்த்து

14/10/2010 13:41

அக்.14: தமிழகத்தில் இருந்து முதல் கட்டமாக ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் 460 பேரை துணை முதல்வர் ஸ்டாலின் சென்னை விமானநிலையத்துக்கு நேரில் சென்று வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் இருந்து முதல் கட்டமாக ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் 460 பேரே மாண்புமிகு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னை விமான நிலையத்திற்கு நேரில் சென்று வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

ஹஜ் பயணிகளை வாழ்த்திப் பேசிய ஸ்டாலின், இஸ்லாமிய மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப தமிழகத்தில் இருந்து ஹஜ் யாத்திரை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம் மூலம் வலியுறுத்தியதாகத் தெரிவித்தார்.

Dinamani

அதன் அடிப்படையில் 1541 பேர் அதிகரிக்கப்பட்டு தற்போது ஆண்டுக்கு 4 ஆயிரத்து 241 பேர் ஹஜ் யாத்திரை மேற்கொள்கின்றனர் என ஸ்டாலின் தெரிவித்தார்.